Posts

Showing posts from December, 2010

"அம்முணி"

மெல்ல நடந்து வந்து கதவிடுக்கின் வழியாக அம்மாவை எட்டிப் பார்த்தாள் நிலா. சற்றே நகர்ந்த போது "களக் சலக்" என்று சின்னதாய் சிணுங்கிய புது கொலுசு இவள் "உஷ்" என்று முறைத்து பார்த்ததும் நிறுத்தி கொண்டது. காதுகளில் எதுவுமே விழாதது போல் தலைக்கு கையை வைத்து கொண்டு ஒருக்களித்து படுத்திருந்த அம்மாவிடம் எந்த சலனமும் இல்லை. தனக்கு தானே லேசாக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்து கொண்டிருந்த சத்தத்தை வைத்து அம்மா இன்னும் உறங்கவில்லை என்பது ஊர்ஜிதமாயிற்று. எட்டே அடிகள் எடுத்து வைத்து ஓடினால் அம்மாவின் கைக்குள்ளே கட்டுண்டு வெதுவெதுப்பான அவளது மூச்சு காற்றில் மூன்றே நிமிடங்களில் சொர்க்கம் போன்று உறங்கிப் போய் விடலாம். ஆனால் அம்மா மீது மகளுக்கு இருந்த பிள்ளைக் கோபமும் அதோடு ஒட்டிக் கொண்டிருந்த வைராக்கியமும் கரைந்து விடுமே! மூன்றாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் நிலாவுக்கும் அவள் அம்மாவிற்கும் சண்டை. அடிக்காது நடக்கும் செல்ல சண்டைகளின் வகையறா தான் என்ற போதிலும் இன்று சற்று அழுத்தமாகவே அமைந்து போனது நிலாவின் கோபம். ..............................