எந்நாட்டவர்க்கும் ....
சுடலைக் காட்டு பித்தன் அவன்
வெண்ணீறு பூசிச்
சாத்திரங் காட்டி ஆடுகிறான்.
நாடு பரவி
காடும் கண்டாடும்
சிற்சபை ஆடிய பாதங்கள் பரப்புது
தீம் தீம் திமி எனும்
தீரா ரீங்காரவொலி.
ஓரிரவு இடுகாட்டில்
ஆடின ஆட்டங் கண்டு
வீழ்ந்த மனமது தேடும் சுவடுகள்...
சாம்பல் மணம்
தலைநீர் பொழிய
கிடை ஏறு முத்தன்
அவனை கண்ட விழி
வேறேதும் கண்கொளுமோ?
ஒருபொழுதும் அவன் நினைவறுமோ?
ஒருபொழுதும் அவன் நினைவறுமோ?
நாடிதொடும் ஜீவப்புனல்
கரைகிறது
வெண்ணீற்று புகைதனிலே...
நாடி வரும் நினைவில் அவன்
பிறைநுதலோ பிறைநகையோ
தேடி அலையும் அந்த ஒரு ஆதாரப் பொழுதினிலே
நீறு தந்து புனல்வழிய
மோன ஸ்வரமென
இனங்காட்டி நடம்புரியும் வேளின்
சிகையினின்று வீழ்ந்த கொன்றை இதழ்
சூடி மனம் இங்கு
வேட்கை பருகிப் பிழைக்குதம்மா!
Comments
Your words are lullaby to my Soul.
I really wonder, how naturally, you have touched the core!?
Here goes my scribbling, induced by you...your...
பூசிய சாம்பலும்!
அப்பிக் கொண்ட இருளும்!
மோனமெனும், போதையும்!
கரைந்து உருகும் ஆணவமும்!
எதனாலோ தொற்றிக் கொள்ளும் நடுக்கமும்!
தகித்து அடங்கும் வேக்கைகளும்!
விழியோரம்,வழியும் நீரில் அடுங்குதே!
ஓம்!
ஓம்!
ஓம் நமச்சிவாய!
எனும் நாமம் எனை ஆட்கொள்ளுதே!
ஆட்டுவிப்பவன் ஆட்டுவித்தால் ஆடாதவர் தான் யார்?