*பூக்களின் பறையொலி*
கண்ணாடி திரையினூடே
தகிக்கும் எம் ஒளிபிம்பங்கள்
கண்டே மெய்மறந்து நின்றீர்.
பிரபஞ்சங்களின் சக்தி
எம்முள் ஓயாது ஓங்கி விழுந்து கொண்டிருந்தன.
உரையாட விரும்பிய போதும்
எம் நிழலோடும் ஒளிரும் சுடரொளி
உம்மை திகைப்பில் ஆழ்த்தி
மௌனத்தில் மூழ்க பண்ணிற்று.
நெருங்கிய போதும்
விலகி நின்றீர்
பிரமிப்பால்.
உமது மனவிசை
எமை திருப்பியதால்
கண்கள் திருப்பினோம்
நீவிர் நின்ற திசையில்.
தயக்கத்துடன் உமது விரல்கள் நீண்டன.
குறிப்பறிந்து யாம் அருகில் வருகையில்
எமது பிரம்மாண்டம் உம்மை வீழ்த்தி போட்டது.
நிலை உணர்ந்த யாம்
எமது நிலையினின்று இறங்கி
உமக்கு சாத்தியப்படும் படியாக
உமக்கு சாத்தியப்படும் படியாக
மாற்று நிலை அடைந்தோம்.
எமது விரல்கள்
இப்பொழுது உமது கரங்களில்.
என்றாலும் நினைவில் கொள்க
எமது பூர்வ நிலையை.
என்றாலும் நினைவில் கொள்க
எமது பூர்வ நிலையை.
எம் மௌனத்தை
பலவீனம் என்று எண்ண விழையாதீர்.அண்டங்கள் அசைந்திடும்
பேரிரைச்சல்களின் நடுவே
மௌனமாய் மிளிர்வதே
எமது ஆளுமைக்கு அடையாளம்.
எமது மென்மை போர்த்திய
மனதின் அடியில்
உறங்குகிறது ஓர் பேராழி.
இது உமது கரங்களில்
தவழும் பூக்கள் தான்.
இருப்பினும்
நினைவில் கொள்வீர்
இந்த பூக்கள் வணங்குதற்குரியதென.
நீவிர் அகிம்சை துறக்கும்
அந்த ஒரு கணத்தில் வெடித்து கிளம்பும்
அக்கினிச் சாரல் தெறிக்கும்
பேராற்றல் ஒளி.
ஆகையால்
விரல்கள் பற்றிக் கொள்க
உமது நகங்களை களைந்த பின்னே.
நீவிர் அகிம்சை துறக்கும்
அந்த ஒரு கணத்தில் வெடித்து கிளம்பும்
அக்கினிச் சாரல் தெறிக்கும்
பேராற்றல் ஒளி.
ஆகையால்
விரல்கள் பற்றிக் கொள்க
உமது நகங்களை களைந்த பின்னே.
Comments
உமது மௌனமே எமை ஆள்கிறதே!
பூக்களின் பறையொலி,
எம்முள் நிச்சியமாய் அச்சம், மரியாதை, என
இன்னும் பெயிரடப் படாத ஏதேதோ அதிர்வலைகள்!
நன்றி!
இந்த பூஜைக்குரிய பூவுக்கு, என்னால் இயன்ற சிறு பரிசு இங்கே :
http://scindiaannadurai.blogspot.com/2011/05/one-stroke-flowers-again.html
நேரில் தர காத்திருக்கிறேன் :)