அழகர்சாமியின் குதிரை
நம்ம தேனி மாவட்டத்து மல்லையாபுரத்தில் 3 வருஷமா ஊருக்கு தெய்வமான அழகருக்கு திருவிழா எடுக்காம போனதால மழை இல்லாம ஊரே பஞ்சத்தில் தவிக்க, உள்ளூர் கோடங்கி மேல வந்து இறங்குன அழகர் உத்தரவுப்படி ரொம்ப சிறப்பா திருவிழாவை நடத்த ஊர் கூடி முடிவெடுக்குது... இந்த நேரத்துல அழகரோட குதிரை காணாத போனா என்ன ஆகும்? அழகர்சாமியின் குதிரை... மதுரை, தேனி போன்ற தென்மாவட்டங்களை சேர்ந்த கதை என்றாலே கத்தி, குத்து, பழி, துரோகம் என்று பரவலாக 'வெள்ளைமனசுக்காரப் பயலுக' ஊருக்கு கங்கணம் கட்டி கொண்டு ரத்தச் சிவப்பில் வண்ணம் அடித்து வந்த அண்மைக்கால தமிழ் சினிமாவின் மனோபாவத்தை 'வெள்ளாவியில வச்சு' வெளுத்து வாங்குகிறது சுசீந்திரன் இயக்கித் தந்த பாஸ்கர் சக்தியின் கதையாலாகிய இந்த படம். ஊரு ஒரு வழியில போனா தான் வேற வழியில போற இளந்தாரிப் பயலுக, தோள்பட்டை வரை நீண்டு தொங்கும் தண்டட்டி அணிந்த கிழவி, கிடைக்குற gapல எல்லாம் கடா விருந்து காணும் ஊர் மைனர், சமயம் பார்த்து ஊர்பயலுக காதில பூ சுத்தும் உள்ளூர் கோடங்கி, ஏழு வயசுலேயே எட்டு ஊருக்கு நீளும் வாயும் வாலும் வெச்சிகிட்டு சுத்தும் ஆழாக்கு அளவு...