Posts

Showing posts with the label தமிழ்

குலதெய்வம்

வைகாசி மாத மாலைத் தென்றல் மயிலிறகாய் வருடியது. அன்று சஷ்டி ஆதலால் கணபதி காலனியின் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வேலவனுக்கு சர்வாலங்காரத்துடன் ஆரத்தி சேவையும் பூஜையும் ' ஜே ஜே ' என நடந்து கொண்டிருந்தது. அரச மரக் காற்றும் ஆலயமணி ஓசையுமாய் மனம் ஒருவகை அமைதியோடு லயித்திருக்க , சிற்ப மண்டபத்து தூணொன்றில் கண் மூடி ரசனையில்ஆழ்ந்திருந்த சிவகாமியை "என்ன மாமி , மௌன சாதகமா ?" என்ற குரல் எழுப்பியது. சாய்ந்திருந்த தூணிலிருந்து சற்றே அகன்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சிவகாமி. அழைத்தது சாக்ஷாத் அலமேலுவே தான். கணபதி காலனியின் பிரத்யேக ரேடியோ சர்வீஸ் ; அலமு காதிற்கு போகாமல் எந்த நடப்பு நிகழ்வும் காலனிக்குள் நுழைவதும் இல்லை , தாண்டுவதுமில்லை. " என்ன அலமு , புதுப் புடவையா ? ரொம்ப நல்லா இருக்கே..வா இப்படி. சுவாமி தரிசனம் முடிஞ்சதா ?" என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு இடம் செய்து கொடுத்து தள்ளி அமர்ந்து கொண்டாள் சிவகாமி. " ஹூம்ம்ம்..." என்று பீடிகையுடன் அலமு ஆரம்பிக்கும் பொழுதே சாவித்திரியும் பத்மாவும் "தரிசனம் ஆச்சா ?" என்று வ...

எந்நாட்டவர்க்கும் ....

சுடலைக் காட்டு பித்தன் அவன் வெண்ணீறு பூசிச் சாத்திரங் காட்டி ஆடுகிறான். நாடு பரவி  காடும் கண்டாடும்  சிற்சபை ஆடிய பாதங்கள் பரப்புது தீம் தீம் திமி எனும் தீரா ரீங்காரவொலி. ஓரிரவு இடுகாட்டில் ஆடின ஆட்டங் கண்டு வீழ்ந்த மனமது தேடும் சுவடுகள்... சாம்பல் மணம் தலைநீர் பொழிய கிடை ஏறு முத்தன் அவனை கண்ட விழி வேறேதும் கண்கொளுமோ? ஒருபொழுதும் அவன் நினைவறுமோ? நாடிதொடும் ஜீவப்புனல் கரைகிறது வெண்ணீற்று புகைதனிலே... நாடி வரும் நினைவில் அவன் பிறைநுதலோ பிறைநகையோ  தேடி அலையும் அந்த ஒரு ஆதாரப்  பொழுதினிலே நீறு தந்து புனல்வழிய மோன ஸ்வரமென இனங்காட்டி நடம்புரியும் வேளின்  சிகையினின்று  வீழ்ந்த கொன்றை இதழ்  சூடி மனம் இங்கு வேட்கை பருகிப் பிழைக்குதம்மா!

முகம்

இளவேனிற்காலம். உறக்கத்தின் நிழல் சூழாத அந்த சில நொடிகளில் நில்லாது சுழன்றோடும் மின்விசிறியின் நடனம் சொல்லாமற் புதைந்து போன சில ஆழ்மனத்து எண்ணப் பதிவுகளை தூசி தட்டி எழுப்பிவிட தும்மல்களின் இடையே மீண்டும் துவங்குகிறது ஒரு தேடல் பயணம். நீந்தி கடக்கிறேன். கடந்த கால அலைகள் மேலெழும்பி நிற்கின்றன. நேரம் பின்னோக்கி செல்வதால் கைவிட்டு போகும் - நிகழ் கால உடமைகள் நினைவுகள் சில உணர்வுகள் மூன்று பரிமாணங்களில் ஒன்று நீங்கியது. சுமைகள் குறைந்து போனதால் சிறகாகி மிதக்கிறேன் நான். இப்பொழுதும் எஞ்சி நிற்கும் முகத்திரைகள் என் முகத்தோடு மரபின் பெயரால்; கிழித்தெறிய முனைகிறேன் நான் தடுக்கிறது தார்மீகக் கோட்பாடு - சுயநலம் என்றோர் புதிய பெயர் சூட்டுகிறது என் முயற்சிக்கு. சளைக்காமல் பெயர்மாற்றம் செய்கிறேன் நான் - சுயநலம் அல்ல - இது சுதந்திரம் . அணைத்து போடும் அணைகள் தாண்டி எழும்பி விரைகிறேன் நான்- பொங்கும் வெள்ளம் தெளிந்த நல்லிசை ஆரோஹனம் ஆதவனின் எழுச்சி ஆட்கொள்ளும் புயல் இன்று பிறந்த புது வானம் முதற்சங்கம் கண்ட முதல் கவிதை பொழியும் விளிம்பில் விரிகின்ற கார்முகில் யுத்தம் காணாத வெள்ளை பூமி பிணைப்புகள் இல்லாத நா...