முகம்

இளவேனிற்காலம்.
உறக்கத்தின் நிழல் சூழாத அந்த சில நொடிகளில்
நில்லாது சுழன்றோடும் மின்விசிறியின் நடனம்
சொல்லாமற் புதைந்து போன
சில ஆழ்மனத்து எண்ணப் பதிவுகளை
தூசி தட்டி எழுப்பிவிட
தும்மல்களின் இடையே
மீண்டும் துவங்குகிறது
ஒரு தேடல் பயணம்.

நீந்தி கடக்கிறேன்.
கடந்த கால அலைகள் மேலெழும்பி நிற்கின்றன.
நேரம் பின்னோக்கி செல்வதால்
கைவிட்டு போகும் -
நிகழ் கால உடமைகள்
நினைவுகள்
சில உணர்வுகள்
மூன்று பரிமாணங்களில் ஒன்று நீங்கியது.
சுமைகள் குறைந்து போனதால்
சிறகாகி மிதக்கிறேன் நான்.

இப்பொழுதும் எஞ்சி நிற்கும்
முகத்திரைகள்
என் முகத்தோடு
மரபின் பெயரால்;
கிழித்தெறிய முனைகிறேன் நான்
தடுக்கிறது தார்மீகக் கோட்பாடு -
சுயநலம் என்றோர் புதிய பெயர் சூட்டுகிறது
என் முயற்சிக்கு.
சளைக்காமல் பெயர்மாற்றம் செய்கிறேன் நான் -
சுயநலம் அல்ல - இது சுதந்திரம்.

அணைத்து போடும்
அணைகள் தாண்டி
எழும்பி விரைகிறேன் நான்-
பொங்கும் வெள்ளம்
தெளிந்த நல்லிசை ஆரோஹனம்
ஆதவனின் எழுச்சி
ஆட்கொள்ளும் புயல்
இன்று பிறந்த புது வானம்
முதற்சங்கம் கண்ட முதல் கவிதை
பொழியும் விளிம்பில் விரிகின்ற கார்முகில்
யுத்தம் காணாத வெள்ளை பூமி
பிணைப்புகள் இல்லாத நான்!

முகத்திரைகள் அற்று போனதால்
என் முழுமுகம் தென்படுகிறது
மானசரோவரின் தெளிந்த நீர்முகட்டில்
என் முக பிம்பம் நோக்கும் நான்.
முதன் முறையாக
புல்லாங்குழல் ஒன்று
தன் இசையை ரசிக்கின்றது.

வானவில்லின் அனைத்து நிறங்களும்
ஒன்றிடும் புள்ளியில்
மெய்கண்ட நான்
மெய்சிலிர்த்து நிற்கும்
அந்த ஒற்றை பொழுதில்
உறங்கா இரவுகளின்
கோர்வைகளாய் தொடரும்
என் நூறு ஜென்ம தேடலுக்கு
முற்றுப் புள்ளி வைத்து போகும்
என் ஒற்றை வரம் - என் முகம்.

Comments

prathi said…
sindhu chanceilla da...awesome poem...i got goosebumps...keep posting ur passionzz....love ya...
Sindhu Sankar said…
Wow!!! Thanks Prathi! I'm thrilled :)
Attitude Wins said…
Excellent de....3rd stanza really amazing....idhu unmaigalin vaeli padu.... nee navayuga kavilayiniyai minnapogum neram vaegu tholaivil ilai...... vazhuthukal de...
don said…
May u live like a lioness and etch your name in the several pages of blog history..
Sindhu Sankar said…
@ Cindhu : Thanks a ton di! I'm more than glad for these comments from you :)

@ Don : A lioness? Wow!Thanks!!!
//சளைக்காமல் பெயர்மாற்றம் செய்கிறேன் நான் -
சுயநலம் அல்ல - இது சுதந்திரம்.//

//புல்லாங்குழல் ஒன்று
தன் இசையை ரசிக்கின்றது.//

அழகான வெளிப்பாடு...அருமையான வார்த்தை தேர்வுகள்..!!!
உங்கள் எண்ணங்களின் நிழல் பிரதிபலிப்பு, உங்கள் சொற் பிரயோகம்.

வாழ்த்துக்கள் சிந்து, சுதந்திரம் தொடரட்டும்.

//pls remove word verification from the comments//
Sindhu Sankar said…
சிவன் அவர்களுக்கு நன்றிகள் பல! உங்கள் நல்வார்த்தை நிறைவேறட்டும் : சுதந்திரம் தொடரட்டும்!!!
priya said…
excellent da. rhombha rhombha arumaiya irunthuchu sindhu. m proud of u d!
Sindhu Sankar said…
Thank u Pri :) :) :)
The foundation lies in your words of encouragement :)
Vayapparaj said…
nice,you have talent to write poetry ,expect more from u.

Popular posts from this blog

Vaaranam Aayiram

To the flawed and the fabulous.

Confessions of a Sleepless Mortal Mind.