Posts

Showing posts from May, 2011

அழகர்சாமியின் குதிரை

Image
நம்ம தேனி மாவட்டத்து மல்லையாபுரத்தில் 3 வருஷமா ஊருக்கு தெய்வமான அழகருக்கு திருவிழா எடுக்காம போனதால மழை இல்லாம ஊரே பஞ்சத்தில் தவிக்க, உள்ளூர் கோடங்கி மேல வந்து இறங்குன அழகர் உத்தரவுப்படி ரொம்ப சிறப்பா திருவிழாவை நடத்த ஊர் கூடி முடிவெடுக்குது... இந்த நேரத்துல அழகரோட குதிரை காணாத போனா என்ன ஆகும்? அழகர்சாமியின் குதிரை... மதுரை, தேனி போன்ற தென்மாவட்டங்களை சேர்ந்த கதை என்றாலே கத்தி, குத்து,  பழி, துரோகம் என்று பரவலாக 'வெள்ளைமனசுக்காரப் பயலுக' ஊருக்கு கங்கணம் கட்டி கொண்டு ரத்தச் சிவப்பில் வண்ணம் அடித்து வந்த அண்மைக்கால தமிழ் சினிமாவின் மனோபாவத்தை 'வெள்ளாவியில வச்சு' வெளுத்து வாங்குகிறது சுசீந்திரன் இயக்கித் தந்த பாஸ்கர் சக்தியின் கதையாலாகிய இந்த படம். ஊரு ஒரு வழியில போனா தான் வேற வழியில போற இளந்தாரிப் பயலுக,  தோள்பட்டை வரை நீண்டு தொங்கும் தண்டட்டி அணிந்த கிழவி, கிடைக்குற gapல எல்லாம் கடா விருந்து காணும் ஊர் மைனர், சமயம் பார்த்து ஊர்பயலுக காதில பூ சுத்தும் உள்ளூர் கோடங்கி, ஏழு வயசுலேயே எட்டு ஊருக்கு நீளும் வாயும் வாலும் வெச்சிகிட்டு சுத்தும் ஆழாக்கு அளவு சின்ன பயலுக பட்டா

*பூக்களின் பறையொலி*

கண்ணாடி திரையினூடே தகிக்கும் எம் ஒளிபிம்பங்கள் கண்டே மெய்மறந்து நின்றீர். பிரபஞ்சங்களின் சக்தி எம்முள் ஓயாது ஓங்கி விழுந்து கொண்டிருந்தன. உரையாட விரும்பிய போதும் எம் நிழலோடும் ஒளிரும் சுடரொளி உம்மை திகைப்பில் ஆழ்த்தி மௌனத்தில் மூழ்க பண்ணிற்று. நெருங்கிய போதும் விலகி நின்றீர்  பிரமிப்பால். உமது மனவிசை எமை திருப்பியதால் கண்கள் திருப்பினோம்  நீவிர் நின்ற திசையில். தயக்கத்துடன் உமது விரல்கள் நீண்டன. குறிப்பறிந்து யாம் அருகில் வருகையில் எமது பிரம்மாண்டம் உம்மை வீழ்த்தி போட்டது. நிலை உணர்ந்த யாம் எமது நிலையினின்று இறங்கி உமக்கு சாத்தியப்படும் படியாக மாற்று நிலை அடைந்தோம். எமது விரல்கள்  இப்பொழுது உமது கரங்களில். என்றாலும் நினைவில் கொள்க எமது பூர்வ நிலையை. எம் மௌனத்தை பலவீனம் என்று எண்ண விழையாதீர். அண்டங்கள் அசைந்திடும் பேரிரைச்சல்களின் நடுவே  மௌனமாய் மிளிர்வதே  எமது ஆளுமைக்கு அடையாளம். எமது மென்மை போர்த்திய மனதின் அடியில் உறங்குகிறது ஓர் பேராழி. இது உமது கரங்களில் தவழும் பூக்கள் தான். இருப்பினும்  நினைவில் கொள்வீர் இந்த பூக்கள் வணங்குதற்குரியதென. நீவிர் அகிம்சை துறக்கும்