Posts

Showing posts from 2011

The Change

She started packing her bags. As she went around collecting her books that lay scattered across the floor, she caught a glimpse of her bleeding lips and a swollen eye, reflected on the glass cabinet. Grabbing her bags, she walked over to Vaishnav's room. A sickly sweet aura of tobacco and alcohol assaulted her senses. Bile welled up in her throat, as she stopped to stared at her drunk abuser for several minutes. Or hours. Or seconds. "Good bye, Vaishnav. I have to go”, she whispered to the alcohol infested being that lay sprawled on the floor. Without a second glance, Malar walked out. *******                                                            Madhavi was frying fish as Malar en...

குலதெய்வம்

வைகாசி மாத மாலைத் தென்றல் மயிலிறகாய் வருடியது. அன்று சஷ்டி ஆதலால் கணபதி காலனியின் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வேலவனுக்கு சர்வாலங்காரத்துடன் ஆரத்தி சேவையும் பூஜையும் ' ஜே ஜே ' என நடந்து கொண்டிருந்தது. அரச மரக் காற்றும் ஆலயமணி ஓசையுமாய் மனம் ஒருவகை அமைதியோடு லயித்திருக்க , சிற்ப மண்டபத்து தூணொன்றில் கண் மூடி ரசனையில்ஆழ்ந்திருந்த சிவகாமியை "என்ன மாமி , மௌன சாதகமா ?" என்ற குரல் எழுப்பியது. சாய்ந்திருந்த தூணிலிருந்து சற்றே அகன்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சிவகாமி. அழைத்தது சாக்ஷாத் அலமேலுவே தான். கணபதி காலனியின் பிரத்யேக ரேடியோ சர்வீஸ் ; அலமு காதிற்கு போகாமல் எந்த நடப்பு நிகழ்வும் காலனிக்குள் நுழைவதும் இல்லை , தாண்டுவதுமில்லை. " என்ன அலமு , புதுப் புடவையா ? ரொம்ப நல்லா இருக்கே..வா இப்படி. சுவாமி தரிசனம் முடிஞ்சதா ?" என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு இடம் செய்து கொடுத்து தள்ளி அமர்ந்து கொண்டாள் சிவகாமி. " ஹூம்ம்ம்..." என்று பீடிகையுடன் அலமு ஆரம்பிக்கும் பொழுதே சாவித்திரியும் பத்மாவும் "தரிசனம் ஆச்சா ?" என்று வ...

அழகர்சாமியின் குதிரை

Image
நம்ம தேனி மாவட்டத்து மல்லையாபுரத்தில் 3 வருஷமா ஊருக்கு தெய்வமான அழகருக்கு திருவிழா எடுக்காம போனதால மழை இல்லாம ஊரே பஞ்சத்தில் தவிக்க, உள்ளூர் கோடங்கி மேல வந்து இறங்குன அழகர் உத்தரவுப்படி ரொம்ப சிறப்பா திருவிழாவை நடத்த ஊர் கூடி முடிவெடுக்குது... இந்த நேரத்துல அழகரோட குதிரை காணாத போனா என்ன ஆகும்? அழகர்சாமியின் குதிரை... மதுரை, தேனி போன்ற தென்மாவட்டங்களை சேர்ந்த கதை என்றாலே கத்தி, குத்து,  பழி, துரோகம் என்று பரவலாக 'வெள்ளைமனசுக்காரப் பயலுக' ஊருக்கு கங்கணம் கட்டி கொண்டு ரத்தச் சிவப்பில் வண்ணம் அடித்து வந்த அண்மைக்கால தமிழ் சினிமாவின் மனோபாவத்தை 'வெள்ளாவியில வச்சு' வெளுத்து வாங்குகிறது சுசீந்திரன் இயக்கித் தந்த பாஸ்கர் சக்தியின் கதையாலாகிய இந்த படம். ஊரு ஒரு வழியில போனா தான் வேற வழியில போற இளந்தாரிப் பயலுக,  தோள்பட்டை வரை நீண்டு தொங்கும் தண்டட்டி அணிந்த கிழவி, கிடைக்குற gapல எல்லாம் கடா விருந்து காணும் ஊர் மைனர், சமயம் பார்த்து ஊர்பயலுக காதில பூ சுத்தும் உள்ளூர் கோடங்கி, ஏழு வயசுலேயே எட்டு ஊருக்கு நீளும் வாயும் வாலும் வெச்சிகிட்டு சுத்தும் ஆழாக்கு அளவு...

*பூக்களின் பறையொலி*

கண்ணாடி திரையினூடே தகிக்கும் எம் ஒளிபிம்பங்கள் கண்டே மெய்மறந்து நின்றீர். பிரபஞ்சங்களின் சக்தி எம்முள் ஓயாது ஓங்கி விழுந்து கொண்டிருந்தன. உரையாட விரும்பிய போதும் எம் நிழலோடும் ஒளிரும் சுடரொளி உம்மை திகைப்பில் ஆழ்த்தி மௌனத்தில் மூழ்க பண்ணிற்று. நெருங்கிய போதும் விலகி நின்றீர்  பிரமிப்பால். உமது மனவிசை எமை திருப்பியதால் கண்கள் திருப்பினோம்  நீவிர் நின்ற திசையில். தயக்கத்துடன் உமது விரல்கள் நீண்டன. குறிப்பறிந்து யாம் அருகில் வருகையில் எமது பிரம்மாண்டம் உம்மை வீழ்த்தி போட்டது. நிலை உணர்ந்த யாம் எமது நிலையினின்று இறங்கி உமக்கு சாத்தியப்படும் படியாக மாற்று நிலை அடைந்தோம். எமது விரல்கள்  இப்பொழுது உமது கரங்களில். என்றாலும் நினைவில் கொள்க எமது பூர்வ நிலையை. எம் மௌனத்தை பலவீனம் என்று எண்ண விழையாதீர். அண்டங்கள் அசைந்திடும் பேரிரைச்சல்களின் நடுவே  மௌனமாய் மிளிர்வதே  எமது ஆளுமைக்கு அடையாளம். எமது மென்மை போர்த்திய மனதின் அடியில் உறங்குகிறது ஓர் பேராழி. இது உமது கரங்களில் தவழும் பூக்கள் தான். இருப்பினும்  நினைவில் கொள்வீர் ...

எந்நாட்டவர்க்கும் ....

சுடலைக் காட்டு பித்தன் அவன் வெண்ணீறு பூசிச் சாத்திரங் காட்டி ஆடுகிறான். நாடு பரவி  காடும் கண்டாடும்  சிற்சபை ஆடிய பாதங்கள் பரப்புது தீம் தீம் திமி எனும் தீரா ரீங்காரவொலி. ஓரிரவு இடுகாட்டில் ஆடின ஆட்டங் கண்டு வீழ்ந்த மனமது தேடும் சுவடுகள்... சாம்பல் மணம் தலைநீர் பொழிய கிடை ஏறு முத்தன் அவனை கண்ட விழி வேறேதும் கண்கொளுமோ? ஒருபொழுதும் அவன் நினைவறுமோ? நாடிதொடும் ஜீவப்புனல் கரைகிறது வெண்ணீற்று புகைதனிலே... நாடி வரும் நினைவில் அவன் பிறைநுதலோ பிறைநகையோ  தேடி அலையும் அந்த ஒரு ஆதாரப்  பொழுதினிலே நீறு தந்து புனல்வழிய மோன ஸ்வரமென இனங்காட்டி நடம்புரியும் வேளின்  சிகையினின்று  வீழ்ந்த கொன்றை இதழ்  சூடி மனம் இங்கு வேட்கை பருகிப் பிழைக்குதம்மா!