அன்புள்ள அம்மா...


உதிரம் கொண்டு உயிர்ப்பித்தாய்
உவந்து உணவாய் உதிரமே ஊட்டினாய்
யான் நோகாது எனைக் காத்த
தாய் நோற்ற நோன்பே நெறி!
நீ கூறும் மொழியே மறை!

அதரம் திறந்த முதல் முறையே
ஓதியதும் நின் திருப்பெயரே!

ஈன்ற மகவை ஈண்டு காக்கும்
நின் திருநெஞ்சத்து கருணைப் புனலில்
நனையாததொரு உயிருமில்லை
நின்னை உணராததொரு பிறவியில்லை!

காலம் தேசம் யாவும் கடந்து
ஓங்கி ஒளிரும் ஒற்றை அறம்
உயிர்கள் தழைக்கும் புனித வரம்!

நாடி தேடி ஓடி வரும்
அலையலையென நின் தாய்மை குணம்
உறவு கடந்த உணர்வாய் ஒளிரும்
விதியை ஜெயிக்கும் மருந்தாய் மிளிரும்!

ஒரு கணமேனும் நின் மனங்குளிர்ந்தால்
பாலை தழைக்கும்; பாவம் அழியும்!

வேதம் சிறக்கும் திருவே!
ஞாலம் போற்றும் அருளே!
அமுதே!
ஒளியே!
அம்மா நின் தாள் சரணம்!

6 comments